'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' புதிய நிர்வாகிகள் தேர்வு
'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 18, 2024 10:07 PM

மும்பை: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், 'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' நிறுவனத்திற்கு 2024 - 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைவராக, மலையாள மனோரமா தலைமை உதவி ஆசிரியர் மற்றும் இயக்குனர் ரியாத் மாத்யூ தேர்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள அச்சு ஊடகங்களின் விற்பனையை கணக்கிடும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமாக, ஏ.பி.சி., எனப்படும் 'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' செயல்படுகிறது.
அரசின் அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பதவி வகிக்கின்றனர். இதன்படி,2024-2025ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி அமைப்பின் தலைவராக மலையான மனோரமா தலைமை உதவி ஆசிரியர் மற்றும் இயக்குனர் ரியாத் மேத்யூ, செயலராக பென்னட் - கோல்மென் கம்பெனி லிமிடெட் செயல் இயக்குனர் மோஹித் ஜெயின்.பொருளாளராக மேடிசன் கம்யூனிகேஷன்ஸ் தலைமை நிர்வாகி விக்ரம் சகுஜா ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தவிர நிர்வாகக்குழுவில், பிரதாப் பவார், சைலேஷ் குப்தா, பிரவீன் சோமேஸ்வர்.துருபா முகர்ஜி, கரன் தார்தா, கிரீஷ் அகர்வால் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

