மருமகனுக்கு எதிராக அத்தை? ஹாசன் தொகுதியில் பரபரப்பு!
மருமகனுக்கு எதிராக அத்தை? ஹாசன் தொகுதியில் பரபரப்பு!
ADDED : மார் 18, 2024 05:40 AM

ஹாசன், : ஹாசன் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுக்கு, அவரது உறவினரே முட்டுக்கட்டையாக உள்ளார்.
ஹாசன் லோக்சபா தொகுதிக்கு, ஸ்ரேயஷ் படேலை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இவர் முன்னாள் எம்.பி., புட்டசாமி கவுடாவின் பேரன்.
இவருக்கு 'சீட்' கொடுத்ததால், புட்டசாமி கவுடாவின் மகள் ராஜேஸ்வரி அதிருப்தியில் உள்ளார். இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தயாராகி வருகிறார்.
சட்டசபை தேர்தலின் போது, ஹாசன் காங்கிரஸ் சீட்டுக்கு ராஜேஸ்வரி அதிகபட்சமாக முயற்சித்தார். ஆனால் சீட் கை நழுவியது.
அதன்பின் லோக்சபா தொகுதியில் போட்டியிட, ஆர்வம் காண்பித்தார். இவரது சகோதரரின் மகன் ஸ்ரேயஷ் படேலும் சீட் முயற்சித்தார். இறுதியில் ஸ்ரேயசுக்கு, காங்., மேலிடம் வாய்ப்பளித்தது.
அவ்வப்போது காங்கிரஸ் மேலிடத்தால், தனக்கு அநியாயம் நடப்பதாக கொதிப்படைந்த ராஜேஸ்வரி, ஹாசன் தொகுதியில் தன் மருமகனுக்கு எதிராக, சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். இது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

