ADDED : மார் 21, 2025 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை கதையை வைத்து, சாவா என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதில், சத்ரபதி சம்பாஜியை மதம் மாற்றம் செய்வதற்கு அவுரங்கசீப் முயன்று, கொடூரமாக கொலை செய்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து, அவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி ஹிந்து அமைப்புகள் போராடி வருகின்றன. நாக்பூரில் நடந்த போராட்டத்தில், முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி மாவட்டம், குல்தாபாத் பகுதியில் அமைந்துள்ள அவுரங்கசீப் கல்லறை தகடு வைத்து மறைக்கப்பட்டுள்ளது.