ADDED : ஜன 21, 2025 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாதரா: ஆட்டோவில் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் ஆட்டோவில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றினர்.
அவர் உத்தர பிரதேசத்தின் படாவுனைச் சேர்ந்த இஸ்லாம், 26, என்று தெரிய வந்தது. அவர் ஆட்டோ டிரைவராக இருக்கலாம். அவரது கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
சம்பவ இடத்தை சுற்றி பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.