ADDED : ஜூலை 14, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் மாயன்னுார் பகுதியைச்சேர்ந்தவர் பத்மாவதி, 64. புற்றுநோயாளியான இவரது பிள்ளைகள் பிரசீஜா, ஜிஷா. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பிள்ளைகளுடன் வாணியம்குளம் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு, ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வரும் போது, எதிரே வந்த லாரி மோதியது.
இதில் படுகாயமடைந்த பத்மாவதியை, அப்பகுதி மக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பிரசீஜா, ஜிஷா ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பினர்.
இந்நிலையில், பத்மாவதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து ஒற்றைப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.