உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 28, 2026 02:23 AM

அ நிறம் | அளவு
லடாக்: லடாக்கில் -----ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாகினர் .
லடாக்கின் சோஜிலா கணவாய், ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையான என். எச்., - 1ல் அமைந்துள்ளது.
இங்குள்ள ஜீரோ பாயின்ட் மற்றும் மினிமார்க் இடையேயான பகுதிகளில் நேற்று மதியம் அடுத்தடுத்து பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி, 10க்கும் மேற்பட்ட கார்கள் புதைந்ததில், ஏழு பேர் பலியாகினர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
மீட்பு படையினர் உடனடியாக பனி குவியலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிச்சரிவு காரணமாக -ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
