ADDED : மே 25, 2026 05:16 AM
கோபேஷ்வர்: உத்தரகண்ட் மாநிலத்தில், பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அருகே நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. எனினும், இந்த இயற்கை பேரிடரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் அருகே குபேர் பண்டார் சிகரம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால் உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் பனிச்சரிவால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமோலி மாவட்ட கலெக்டர் கவுரவ் குமார் கூறுகையில், ''பனிச்சரிவு இயற்கையான நிகழ்வது தான். இந்த பனிச்சரிவால் பிரதான சாலைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், போக்குவரத்து வழக்கம் போல சீராக நடக்கிறது.
''பனிச்சரிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நிலைமை கட்டுக்குள்உள்ளது,'' என்றார்.
