நேரலை ஒளிபரப்பை தவிர்த்திடுங்க; ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
நேரலை ஒளிபரப்பை தவிர்த்திடுங்க; ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
ADDED : மே 09, 2025 02:07 PM

புதுடில்லி: பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும் கள செயல்பாடுகளை நேரலை செய்வதை ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; பாதுகாப்புத்துறையினர் மேற்கொள்ளும் ஆபரேஷன்கள் மற்றம் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் ஒளிபரப்புவதை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் தனிநபர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற முக்கிய நடவடிக்கைகளை நேரலையில் வெளியிடுவதன் மூலம், ராணுவத்தின் செயல்திறன் பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலையும் உண்டாக்கும்.
கடந்த காலங்களில் நடந்த கார்கில் போர், மும்பை தாக்குதல் மற்றும் கந்தஹர் விமானக் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுபோன்ற செய்தி வெளியீட்டினால் பெரும் விளைவுகள் ஏற்பட்டன.
எனவே, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, அதுபற்றி விளக்கங்களை கொடுப்பார். அனைவரும் தங்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.