தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ விழிப்புணர்வு அவசியம்!

விழிப்புணர்வு அவசியம்!

விழிப்புணர்வு அவசியம்!


ADDED : பிப் 07, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடு முழுதும் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். எனவே, டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு குறித்து, கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். நிதி தொடர்பான கல்வியறிவை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

திரவுபதி முர்மு ஜனாதிபதி

49 சதவீத பெண்கள் பயன்!


ஆயுஷ்மான் பாரத் - ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், மருத்துவமனை சேர்க்கைகளில், 49 சதவீத பெண்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை, 85.48 கோடி பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் 33,270க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,

கொள்கை வகுக்க வேண்டும்!


தனி நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க கொள்கை வகுக்க வேண்டும். டிஜிட்டல் மாயை, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் ஆன்லைன் அழுத்தத்தால் பாதிக்கப்படும் இளைஞ ரின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

ராஜிவ் சுக்லா ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us