ADDED : ஜன 20, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா:அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில், தனியார் மருத்துவமனை ஒன்று, நேற்று முன்தினம் முதல் 22ம் தேதி வரை, இலவசமாக பிரசவம் பார்க்கப்படும் என, அறிவித்துள்ளது.
விஜயபுராவில் உள்ள, ஜே.எஸ்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
அயோத்தியில் 22ல், ராமர் கோவில் திறக்கப்படுகிறது. ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் நோக்கில், எங்களின் மருத்துவமனையில், 18 முதல், 22 வரை அனைத்து கர்ப்பிணியருக்கும் இலவசமாக பிரசவம் பார்க்கப்படும்.
ஜனவரி 18 முதல், இதுவரை நாங்கள் ஏழு பிரசவங்களை இலவசமாக பார்த்துள்ளோம். இந்த சலுகை ஜனவரி 22 வரை இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இந்த அறிவிப்பை விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வரவேற்றுள்ளார்.