கோர்ட் சொன்னது ரொம்ப கரெக்ட்! புல்டோசர் உத்தரவுக்கு அயோத்தி எம்.பி.,சல்யூட்
கோர்ட் சொன்னது ரொம்ப கரெக்ட்! புல்டோசர் உத்தரவுக்கு அயோத்தி எம்.பி.,சல்யூட்
ADDED : செப் 18, 2024 07:27 AM

அயோத்தி; நாடு முழுவதும் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் விதித்த தடை உத்தரவை வரவேற்பதாக அயோத்தியின் சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத் கூறி உள்ளார்.
குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைகள் புதுடில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்றது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட, இந்த நடவடிக்கைக்கு கோர்ட் அக்டோபர் 1ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
இந் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு அயோத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி., அவதேஷ் பிரசாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறி உள்ளதாவது;
கோர்ட்டின் தீர்ப்பு நியாயமானது. இந்த உத்தரவின் மூலம் கோர்ட்டின் கண்ணியம் மேலும் உயரும். இந்த முடிவை நான் வரவேற்கிறேன். உத்தரவை அரசு நிர்வாகம் பின்பற்றும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சமாஜ்வாதி தலைவரும், எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் புல்டோசர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். புல்டோசர் நடவடிக்கை மூலம் நீதி வழங்கமுடியாது, அது மக்களை பயமுறுத்துவதாக உள்ளது என்று கூறி இருந்தார்.

