ராமர் கோயில்: பிரதமர் மோடியை புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்
ராமர் கோயில்: பிரதமர் மோடியை புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்
ADDED : ஜன 13, 2024 03:57 PM

சிம்லா: ''அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது'' என ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவர் வீரப்தர சிங் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கிறார்கள். நாங்கள் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.