ஏப்ரல் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோவில் முழு கட்டுமானப் பணிகள் நிறைவு
ஏப்ரல் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோவில் முழு கட்டுமானப் பணிகள் நிறைவு
ADDED : ஜன 31, 2026 10:27 PM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த 2 நாள் கட்டுமானக் குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கோவிலில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு எல்அன்டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள், தங்களின் பணிகளை முடித்து விட்டு, ஏப்ரல் 30ம் தேதி கோவில் வளாகத்தை விட்டு வெளியேறி விடும். அன்றைய தினத்திற்குள் அனைத்து ஆவணப் பணிகளையும், பில் கட்டண நடைமுறைகளையும் முறைகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளுக்கும் மூன்று ஆண்டுகள் உத்தரவாதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கோவில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இரு நிறுவனங்களைச் சேர்ந்த சிறு குழு மட்டும் கோவில் வளாகத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கும். ஏப்ரல் 30க்குப் பிறகு, எல்அன்டி, டாடா கன்சல்டன்சி மற்றும் மாநில கட்டுமானக் கழகத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொறுப்பேற்றுக்கொள்ளும்.
ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கான மொத்தச் செலவு ரூ.1,900 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஜிஎஸ்டி உட்பட சுமார் ரூ. 1,600 கோடி ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

