ADDED : ஜன 06, 2024 12:34 PM

புதுடில்லி: கடவுள் ராமர் குறித்து ஸ்வாஸ்தி என்ற பெண் இயற்றி பாடியுள்ள பக்தி பாடலை கேட்டால், மனம் உணர்ச்சிகளாலும், கண்கள் கண்ணீராலும் நிறையும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, பல கலைஞர்கள் ராமர் குறித்து பாடல்களை பாடி ஆடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்வாஸ்தி மெஹூல் என்பவர், ‛ராம் ஆயங்கே' என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியும், பாடியும் வெளியிட்டுள்ளார். அந்த பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாடலை ‛எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பாராட்டி கூறியுள்ளதாவது:
ஒரு முறை ஸ்வாஸ்தியின் பாடலை கேட்டால், அது காதுகளில் நீண்ட நேரம் எதிரொலிக்கும். கண்கள் கண்ணீரிலும், மனம் உணர்ச்சிகளாலும் நிரம்பும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறைகளில் நேரடி ஒளிபரப்பு
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சியை உ.பி.,யில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒளிபரப்பு செய்ய மாநில அரசு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.