ADDED : பிப் 17, 2024 05:04 AM
சுகாதாரம், குடும்ப நலம்
l நடப்பாண்டு மைசூரு, உடுப்பி, தாவணகெரே, விஜயபுரா, மாண்டியா, தார்வாட், கொப்பால் மாவட்டங்களில், 187 கோடி ரூபாய் செலவில், 'கிரிட்டிகல் கேர் பிளாக்'குகள் துவக்கப்படும்
l தாலுகா மருத்துவமனைகள் இல்லாத ஆனேக்கல், நெலமங்களா, ஹொஸ்கோட், சிருங்கேரி, கானாபுரா, சிரஹட்டி, எளந்துரில் நடப்பாண்டு 200 கோடி ரூபாய் செலவில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் கட்டப்படும்
l சுகாதாரத்துறையின் சிதிலமடைந்த கட்டடங்களை பழுது பார்க்க, புதுப்பிக்க 75 கோடி ரூபாய் செலவிடப்படும்
l பெங்களூரின் கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில் தாய், குழந்தைகள் மருத்துவமனை கட்டடம் கட்டவும், அடிப்படை வசதிகளை செய்யவும் 150 கோடி ரூபாய் செலவிடப்படும்
l கிராமப்புற மக்களுக்கு, தினமும் 24 மணி நேரம் அவசர சிகிச்சை கிடைக்கும் வகையில், 350 கோடி ரூபாய் செலவில், 25 ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்படும்
lகல்யாண கர்நாடகா பகுதியில், 221 கோடி ரூபாய் செலவில், 46 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்படும்
l கிராமப்பகுதிகளில் நடப்பாண்டு, புதிதாக 'ஆரோக்கிய க்ஷேமா' மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்கு 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
lபுற்று நோயாளிகளுக்காக, அனைத்து மாவட்டங்களிலும், 20 கோடி ரூபாய் செலவில் 'கே கேர் கிமோதெரபி' மையங்கள் அமைக்கப்படும்
l பெண்களுக்கு ஏற்படும், மார்பக புற்றுநோயை, ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அயளிக்க, 20 மாவட்ட மருத்துவமனைகளில், 'டிஜிட்டல் மம்மோக்ராபி' இயந்திரங்கள் வாங்க, 21 கோடி ரூபாய் செலவிடப்படும்
l இதய நோய் சிகிச்சைக்காக, அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும், ஸ்டெமி சிகிச்சை பலப்படுத்தப்படும். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சேகரிக்க, 32 கோடி ரூபாய் வழங்கப்படும்
l மாவட்ட மருத்துவமனைகளை, தீ விபத்தில் இருந்து காப்பாற்ற, ஆறு கோடி ரூபாய் செலவில், தீயணைப்பு வசதி செய்யப்படும்
l காச நோய் பரிசோதனைக்காக, ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உபகரணங்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
l கொப்பால், கலபுரகியில் ஐ.சி.டி.டி., சிகிச்சை மையங்களை பலப்படுத்த ஏழு கோடி ரூபாய் வழங்கப்படும்
l நோயாளிகளுக்கு ரத்த பற்றாக்குறைக்கு தீர்வு காண, புதிதாக 50 ரத்தம் சேமிப்பு மையம் துவக்கப்படும்
l ஹுனகுந்த், சிரா, ஹகரி பொம்மனஹள்ளியில், தாலுகா அளவில் பொது சுகாதார ஆய்வகங்களை அமைக்க 11 கோடி ரூபாய் செலவிடப்படும்
l ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில், ஆய்வக வசதி கிடைக்கும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 430 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்கு 20 கோடி ரூபாய் செலவிடப்படும்
l நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மாநிலத்தின் நான்கு மண்டலங்களில், தலா ஒரு ஆயுர்வேத நீரிழிவு சிகிச்சை மையம் திறக்கப்படும்.