ADDED : மே 13, 2026 12:38 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் தடுக்கப்பட்ட மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் இந்நடவடிக்கையை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, தன் ஆட்சியின் போது, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், சுவேந்து அதிகாரி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கினர்.
இதேபோல் மத்திய அரசின் மற்ற திட்டங்களான பி.எம்., கிசான், பி.எம்., ஸ்ரீ, விஸ்வகர்மா திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
