தேசியவாத காங்கிரசில் இணைந்த பாபா சித்திக் மகன்! வேட்பாளராக அறிவிப்பு
தேசியவாத காங்கிரசில் இணைந்த பாபா சித்திக் மகன்! வேட்பாளராக அறிவிப்பு
ADDED : அக் 25, 2024 03:42 PM

மும்பை: பாபா சித்திக் மகன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாபா சித்திக் மகன் ஜீஷன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உணர்ச்சிமயமான நாள். என்னை நம்பியதற்காக அஜித் பவார், பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாந்த்ரா கிழக்கில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது. நான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா போட்டியிடுகிறது. சிவசேனாவின் அழுத்தம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் விஷ்வநாத் மஹாஸ்வரை ஜீஷன் தோற்கடித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

