விபத்தில் இறந்த குட்டி குரங்கு தாய் நடத்திய பாச போராட்டம்
விபத்தில் இறந்த குட்டி குரங்கு தாய் நடத்திய பாச போராட்டம்
ADDED : மார் 08, 2024 02:03 AM

பெலகாவி: விபத்தில் இறந்த குட்டியின் உடலை எடுக்க விடாமல், தாய் குரங்கு பாச போராட்டம் நடத்தியது, மக்கள் கண்களை கலங்க வைத்தது.
பெலகாவியின் ஹுக்கேரி நிடோஷி கேட் வனப்பகுதி சாலையில், ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு குரங்களும், அதன் குட்டிகளும் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஒரு குட்டி குரங்கு, சாலையை கடக்க முயன்றது.
அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதி, குரங்கு பரிதாபமாக இறந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குட்டி இறந்தது தெரியாமல், அதன் அருகில் தாய் குரங்கு, பாவமாக நின்று கொண்டு இருந்தது.
அங்கு வந்த வனத்துறையினர், இறந்த குட்டி குரங்கின் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்க விடாமல் தாய் குரங்கு பாச போராட்டம் நடத்தியது. இதனால் அங்கு இருந்த மக்கள், வனத்துறையினர் கண்கள் கலங்கின. ஒருவழியாக குட்டி குரங்கின் உடலை வனத்துறையினர் மீட்டு எடுத்து சென்றனர்.

