ஓய்வூதிய விபரம் பதிவேற்ற விதிக்கப்பட்ட கெடு நீட்டிப்பு
ஓய்வூதிய விபரம் பதிவேற்ற விதிக்கப்பட்ட கெடு நீட்டிப்பு
ADDED : ஜன 05, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களின் சம்பள விபரத்தை, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை, வரும் மே 31 வரை நீட்டித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
அதிக பங்கீடு அளித்து, ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க, கடந்த ஆண்டு மே 3ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தற்போது வரும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.