ADDED : மார் 07, 2024 04:17 AM

கலபுரகி : கலபுரகி பஸ் நிலையத்தில் கிடந்த பையால், வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் குண்டு வெடித்தது, கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாலும், மக்களிடையே ஒருவித அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கலபுரகி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை, ஒரு பை கிடந்தது. நீண்ட நேரமாக அந்த பையை யாரும் எடுத்துச் செல்லவில்லை.
இதனால் அங்கிருந்த, பயணியர் இடையில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்றனர். பயணியரை பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, பையை எடுத்து பார்த்தனர்.
அந்த பையில், சந்தேகப்படும்படியான எந்த மர்மபொருளும் சிக்கவில்லை. அதன் பின்னரே போலீசாரும், பயணியரும் நிம்மதி அடைந்தனர்.

