மெட்ரோ ரயில் கேபிள் திருடியவருக்கு ஜாமின் மறுப்பு
மெட்ரோ ரயில் கேபிள் திருடியவருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : பிப் 04, 2026 04:36 AM

புதுடில்லி: மெட்ரோ ரயில் பாதையில், 32 மீட்டர் செப்புக் கம்பியை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்காலிக ஊழியர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த டில்லி உயர் நீதிமன்றம், பொதுமக்களின் உயிருடன் விளையாடியதுடன் அரசு கஜானாவுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என கூறியது.
டில்லி மெட்ரோ ரயில் பாதையில் கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவில் செப்புக் கம்பி அறுக்கப்பட்டதால், ரயில் சேவை தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனம் அதை உடனடியாக சீரமைத்தது.
ஆஜர் இதுகுறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மெட்ரோ ரயில் நிறுவன தற்காலிக ஊழியரை ஜூலை மாதம் கைது செய்து, 32 மீட்டர் செப்புக் கம்பியை பறிமுதல் செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
கீழமை நீதிமன்றங்களில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நீதிபதி சவுரவ் பானர்ஜி தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு:
குற்றம் சாட்டப்பட்டவர் வெறும் முட்டாள்தனமான செயலில் ஈடுபடவில்லை. அவரது செயலால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதையும் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
பெரும் இழப்பு பொதுமக்களின் உயிருடன் விளையாடிய குற்றத்தைச் செய்தவருக்கு ஜாமின் வழங்கினால், அது மேலும் பல குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும். அவருடைய இந்தச் செயலால் அரசின் கஜானாவுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். எனவே, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
