'பல்லாரி ரெட்டி சகோதரர்கள் பா.ஜ.,வுக்கு மீண்டும் பலம்'
'பல்லாரி ரெட்டி சகோதரர்கள் பா.ஜ.,வுக்கு மீண்டும் பலம்'
ADDED : அக் 06, 2024 11:48 PM

பல்லாரி : ''பல்லாரியில் ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு ஆகியோர் மீண்டும் பா.ஜ.,வுக்கு பலம் சேர்ப்பர்,'' என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
சுரங்க முறைகேடு வழக்கில், பல்லாரி செல்ல ஜனார்த்தன ரெட்டிக்கு, நீதிமன்றம் விதித்த தடையை, சமீபத்தில் நீக்கியது. பல ஆண்டுகளுக்கு பின், கடந்த 4ம் தேதி பல்லாரிக்கு சென்ற ஜனார்த்தன ரெட்டிக்கு அவரது ஆதரவாளர்கள், பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், பல்லாரிக்கு நேற்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா வந்திருந்தார்.
அவர் அளித்த பேட்டி: பல்லாரியில் ஸ்ரீராமுலு மட்டும் இருந்த போது பா.ஜ.,வுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இப்போது ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு ஆகியோரால் மீண்டும் பா.ஜ.,வுக்கு பலம் அதிகரிக்கும். இது மாநிலம் முழுதும் எதிரொலிக்கும்.
'முடா' சட்ட விரோதத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'முதல்வர் ராஜினாமா செய்தாலும், செய்யா விட்டாலும், அவரின் மனைவி குறித்து யாரும் பேசவில்லை. அவரின் மனைவி மீது எங்களுக்கு மரியாதை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.