உள்ளடக்கத்திற்கு செல்ல
முடிவுற்றது பி அண்டு ஹெச் பார் கவுன்சில் தேர்தல்
முடிவுற்றது பி அண்டு ஹெச் பார் கவுன்சில் தேர்தல்
ADDED : மார் 20, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
குருகிராம்,:பி அண்டு ஹெச் எனும் பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி அருகே உள்ள குருகிராம், பரீதாபாத் மற்றும் நுாஹ் மாவட்டங்களுக்கான பார் கவுன்சில் தேர்தல் நேற்று முன்தினம் குருகிராமில் நடந்தது. குருகிராமில், மொத்தமுள்ள 10,859 வழக்கறிஞர்களில், ஓட்டளிக்க தகுதி பெற்ற, 7,497 வழக்கறிஞர்கள் ஓட்டளித்தனர்.
குருகிராம் வழக்கறிஞர் சங்க தேர்தலின் பார்வையாளராக, யஷ்விந்திரா சிங் நியமிக்கப்பட்டிருந்தார். மொத்தம், 157 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். அவர்களில், 15 பேர் பெண்கள். ஆறு பேர் குருகிராம் நீதிமன்றங்களை சேர்ந்தவர்கள்.
காலை, 9:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து, மாலை, 5:00 மணிக்கு நிறைவடைந்ததாக கூறப்பட்டது.
