ADDED : ஜன 10, 2025 11:11 PM

பொதுவாக குழந்தைகளுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். பாலில் கலந்து குடிப்பதுடன் வெறுமனே கூட சாப்பிடுவர். இதுபோல குழந்தைகள் அதிகம் விரும்பும், 'பனானா பூஸ்டு'ம் உள்ளது. அது என்ன பனானா பூஸ்ட்? வாழைப்பழத்தில் பூஸ்டை சேர்ந்து செய்வதாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை.
முழுக்க முழுக்க ஆரோக்கியமான வகையில் செய்யப்படுகிறது. பனானா பூஸ்ட் செய்வது மிகவும் எளிது. காலையில் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பிரேக் பாஸ்டாக கூட கொடுத்துவிடலாம். பனானா பூஸ்ட் ராகி மாவில் செய்யக் கூடியது. ராகி மாவில் ஏதாவது டிஷ் செய்து கொடுத்து, குழந்தைகள் சாப்பிட மறுக்கலாம். ஆனால், பனானா பூஸ்டை கண்டிப்பாக ரசித்து குடிப்பர். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை: வாணலியில் ராகி மாவை வறுத்து தேவைப்படும் அளவு தண்ணீரை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும். பின், நன்கு ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். பின் ஒரு டம்ளரில் ஊற்றி தேவையான அளவு நட்ஸை பொடியாக நறுக்கி சேர்த்தால் பனானா பூஸ்ட் தயார்.
தேவைப்படும் பொருட்கள்:
* 2 டேபிள் ஸ்பூன் ராகி மாவு
* 4 பேரீச்சம் பழம்
* 1 டீஸ்பூன் தேன்
* 2 வாழைப்பழம்
* 5 பாதாம் பருப்பு
* தேவையான அளவு நட்ஸ்

