UPDATED : ஜூலை 16, 2024 09:58 PM
ADDED : ஜூலை 16, 2024 05:29 PM

மும்பை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் பயற்சி நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது.
தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்துள்ள அரசு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக முசோரி வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் முசோரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து அவரை மாநில அரசு விடுவித்து உள்ளது.
கலெக்டர் மீது பாலியல் புகார்
இதற்கிடையே தான் பயிற்சி திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டதையறிந்து, புனே மாவட்ட கலெக்டர் மீது போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார் புஜா கேத்கர்.