தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பெங்களூருவில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை; அரசு ஆஸ்பத்திரி சுவர் இடிந்து 7 பேர் பலி

பெங்களூருவில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை; அரசு ஆஸ்பத்திரி சுவர் இடிந்து 7 பேர் பலி

பெங்களூருவில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை; அரசு ஆஸ்பத்திரி சுவர் இடிந்து 7 பேர் பலி


ADDED : ஏப் 29, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூருவில் கனமழையின் போது அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர்.

பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக இன்று பலத்த மழை கொட்டியது. சிவாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக முடங்கியது.

இந் நிலையில் சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரி அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர், மழையால் இடிந்து விழுந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசாரும், மீட்புக்குழுவினரும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த சடவலங்களை மீட்டு அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த முதல்வர் சித்தராமையா, காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், நடந்த சம்பவம் குறித்தும் அவர் அங்கு விவரம் கேட்டார். பின்னர் அதிகாரிகளுடன் பேசிய சித்தராமையா, இந்த கட்டடம் எப்போது கட்டப்பட்டது? அண்மையில் அதன் உறுதி குறித்து ஆய்வு நடத்தப்பட்டதா என்பது பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us