ADDED : மார் 10, 2024 06:35 AM

பெங்களூரு நகரம், 1871ல் 4 கி.மீ., பரப்பளவு கொண்டதாக இருந்தது. அப்போதைய மக்கள்தொகை வெறும் 1 லட்சம் தான். குடிப்பதற்கும், அன்றான பயன்பாட்டுக்கும், ஏரிகள், குளங்களில் இருந்த தண்ணீரே போதுமானதாக இருந்தது.
தற்போது, 800 சதுர கி.மீ., பரப்பளவாக விரிந்துள்ளது. மக்கள்தொகையும், 1.30 கோடியை நெருங்குகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும், புறநகரில் உள்ள 110 கிராமங்கள், 2007ல், பெங்., மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இன்றளவும் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், காவிரியில் இருந்து, பெங்களூரு நகருக்கு தினமும் 1,450 எம்.எல்.டி., நீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகரில், 10.37 லட்சம் காவிரி நீர்க் குழாய் இணைப்புகள் உள்ளன. ஆனால், இவற்றில் ஏராளமானவை முறைகேடானவை. இவற்றை முறைப்படுத்த முடியவில்லை.
இதனால், 30 சதவீதம் காவிரி நீர் திருடப்படுவது தெரிய வந்துள்ளது. அதாவது, ஒரு லிட்டரில், 300 மி.லி., திருடப்படுகிறது. சில பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் கசிவதாலும் விரயமாகிறது. இதனால், வழக்கத்தை விட, கோடை காலத்தில், 20 சதவீதம் தண்ணீர் கூடுதலாக தேவைப்படுகிறது.
-----------------
படம்: 10_IISc Ramachandra
ராமசந்திரா
==
மினி காடுகள் உருவாக்கி, ஏரிகள் துார்வாருங்கள்!
ஐ.ஐ.எஸ்.சி., பேராசிரியர் ராமசந்திரா அட்வைஸ்
===
கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில இடங்களில் ஆழ்துளைக்கிணறுகள் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் கழக பேராசிரியர் டி.வி.ராமசந்திரா கூறியதாவது:
எந்தவொரு பகுதியும், வாழ போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். கடந்த 4 - 5 ஆண்டுகளாக தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். பெங்களூரில் கான்கிரீட் சாலைகள் அதிகரித்துள்ளன.
மேலும், 88 சதவீதம் தாவரங்கள் மறைந்து, 79 சதவீதம் நீர் நிலைகள் மறைந்துவிட்டன. நிலத்தில், நுண் துளைகள் நிறைந்ததாக மாற்ற, எங்களுக்கு ஏரிகள், தாவரங்கள் இரண்டும் தேவை. இதில், அரசு கவனம் செலுத்தினால், பெங்களூரு நிலையானதாக இருக்கும்.
நகரில், ஆண்டுக்கு 70 - 85 செ.மீ., மழை பெய்கிறது. அதாவது 15 டி.எம்.சி., பெய்கிறது. பெங்களூருக்கு 18 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. ஏரிகள் துார்வாரினால் தண்ணீர் சேமிக்கலாம். குறிப்பிட்ட இடங்களில் மினி காடுகளை உருவாக்கலாம்.
தற்போது, 1,800 அடி ஆழம் தோண்டியும் ஆழ்துளைக்கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு அதிக நிதி வழங்குவதால் என்ன பயன்? இத்தகைய பொறுப்பற்ற முடிவு எடுப்பதற்கு, ஒரு எல்லை இருக்க வேண்டும்.
ஏரிகளில் சுத்தமான நீர், கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த நீரை பயன்படுத்தினால், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு பிரச்னைகள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
===========================
பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
வார்டு பொறுப்பு அதிகாரி தொடர்பு எண்
எலஹங்கா மண்டலம்:
கெம்பேகவுடா ராமசஞ்சீவய்யா 94806 85320
சவுடேஸ்வரி நரசிம்மையா 94482 75176
அட்டூர் ராமகிருஷ்ணய்யா 94806 88003
எலஹங்கா மோகன் 94806 88004
ஜக்கூர் மஹந்தேஷ் 94806 88-005
தனிசந்திரா சுரேஷ் தேவராஜ் 94806 88006
பேட்ராயனபுரா சந்தோஷ் 9353216779
கோடிகேஹள்ளி பிரவீன் 94806 88008
வித்யாரண்யபுரா அர்ச்சனா 94806 88009
தொட்டபொம்மசந்திரா 94806 88010
குவெம்புநகர் 94806 88011
பொம்மனஹள்ளி மண்டலம்:
எச்.எஸ்.ஆர்., லே - அவுட் ராஜு 80954 22922
பொம்மனஹள்ளி விக்ராந்த் 97429 16593
ஜரகனஹள்ளி சுரேஷ் 94491 49231
புட்டேனஹள்ளி அஸ்வினி 96609 67268
பிலேகஹள்ளி ரகுநாத் 90350 40899
ஹொங்கசந்திரா ரமேஷ்தேவ் 91102 22045
மங்கம்மனபாளையா பிரகாஷ் 94485 15158
அரகெரே ரவி 98457 23479
உத்தரஹள்ளி ரோஹித் 96637 66296
எலச்சனஹள்ளி ரமேஷ் 91080 28820
சிங்கசந்திரா சந்திரகாந்த் 76769 18176
பேகூர் விரேஷ் ஆலதகட்டி 94806 88260
கொட்டிகெரே நரேந்திர குமார் 98807 15380
கோனணகுண்டே சோமசேகர் 99027 65727
அஞ்சனாபுரா ஜெயபிரகாஷ் 99022 54400
வசந்தபுரா ரகு 77606 35163
==============================
படம்:10_Ramprasath Manogar BWSSB
ராம்பிரசாத் மனோகர்
===
யாரும் ஆதங்கப்பட தேவையில்லை
குடிநீர் வடிகால் வாரிய தகவல் நம்பிக்கை
==
தண்ணீர் பிரச்னை குறித்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
மார்ச் முதல் ஜூலை இறுதி வரை பெங்களூருக்கு 8 டி.எம்.சி., தண்ணீர் தேவை. பெங்களூரு உட்பட காவிரியை நம்பியுள்ள பகுதிகளுக்கு ஜூலை இறுதி வரை 17 டி.எம்.சி., தண்ணீர் தேவை. தற்போது, காவீரி நீர்ப்பிடிப்பு அணைகளில் 34 டி.எம்.சி., இருப்பு உள்ளது.
தேவையை விட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதால், பெங்களூரு மக்கள் கவலைப்படத் தேவையில்லை. நகருக்கு வழக்கம்போல் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
அறிவியல் ரீதியாக, ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவை. நகரில் 1.40 கோடி மக்கள் உள்ளனர். தினமும் 2,100 எம்.எல்.டி., நீர் தேவை. தினமும் 1,450 எம்.எல்.டி., காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
புறநகரில் உள்ள 110 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அங்கு, 650 எம்.எல்.டி., தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு, நாம் அனைவருமே காரணம்.
அந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டுள்ளன. அவர்கள் காவிரி நீரை நம்பியில்லை. ஆழ்துளைக்கிணற்று நீரை நம்பியே உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஐ.ஐ.எஸ்.சி.,யுடன் இணைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குடிசை வாழ் பகுதிகள், மக்கள் அதிகம் மிகுந்த பகுதிகளில், 582 சிந்தடிக் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன.
காவிரி 5ம் கட்ட திட்டம், மே 15க்குள் முடிந்து விடும். அப்போது 110 கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
