ADDED : செப் 21, 2024 06:49 AM

தென் மேற்கு ரயில்வே நிலையங்களில் பங்கார்பேட்டை டீ என்றாலே மிகவும் ஸ்பெஷல்.
பங்கார்பேட்டை வழியாக தினமும் 80க்கும் அதிகமான சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இவை பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், பயணியர், லோகோ பைலட்டுகள், கார்டுகள் அனைவரின் பார்வையும் டீ கடை மீது தான்.
அளவான சர்க்கரையுடன், சூடான, மிக சுவையான, தேநீர் விற்பனை செய்யப்படுகிறது. 150 மில்லி ஐந்து ரூபாய் மட்டுமே. இங்கு தயாராகும் டீ போல, வேறெங்கும் கிடைக்காது என்பது பயணியர், ரயில்வே ஊழியர்களின் கருத்து.
தங்கவயலில் இருந்து பெங்களூருக்கு சொர்ணா ரயிலில் செல்லும் பயணியர் 30 முதல் 40 டீ 'கப்'களில் நிரப்பிய டீயை 'ட்ரே'வில் வாங்கி வருகின்றனர். கப் டீயை எடுத்து குடித்து விட்டு நடைமேடையில் எறிந்து செல்கின்றனர். ரயில் சென்ற பின்னர், அந்த ட்ரேயை, கடை ஊழியர்கள் எடுத்துச் செல்வர். இது வழக்கமாக நடக்கும் சம்பவமாக உள்ளது.
பங்கார்பேட்டை டீ பலரையும் அடிமையாகி விட்டதாகவே பல பயணியர் தெரிவிக்கின்றனர்.
பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கடையில் டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள் - நமது நிருபர் -.