தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'டி-20' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி நீக்கம்

'டி-20' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி நீக்கம்

'டி-20' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி நீக்கம்


UPDATED : ஜன 25, 2026 05:40 AM

ADDED : ஜன 25, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2026 05:40 AM ADDED : ஜன 25, 2026 02:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் இந்தியாவில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க மறுத்தது வங்கதேசம்.

'இந்தியாவில் பாதுகாப்பு இல்லை, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும்,' என வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) கோரிக்கை விடுத்தது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கண்டுகொள்ளவில்லை.

கால அவகாசம்


மாறாக, இந்தியா வருவது குறித்து இறுதி முடிவெடுக்க இரண்டு முறை கால அவகாசம் கொடுத்தது. தனது முடிவில் உறுதியாக இருந்தது வங்கதேசம். தவிர, 'சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் ஐ.சி.சி., குழுவிடம்' (டி.ஆர்.சி.,), வங்கதேசம் அப்பீல் செய்தது. இதை விசாரிக்க ஐ.சி.சி., மறுத்து விட்டது.

இதையடுத்து ஐ.சி.சி., கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி, 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி, நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கும், இத்தகவல் தெரிவிக்கப்பட்டன. 'இ-மெயில்' வழியாக இவ்விவரம் பி.சி.பி.,க்கு தெரிவிக்கப்பட்டது.

இதில்,' இந்தியாவுக்கு செல்வது குறித்து முடிவெடுக்க 24 மணி நேரம் அவகாசம் தரப்பட்டது. காலக்கெடு முடிந்த பிறகும், ஐ.சி.சி.,க்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன், தாகாவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது, விதிகளை மீறிய செயல். இதனால் வங்கதேச அணி நீக்கப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பீல் செய்யுமா


ஐ.சி.சி., முடிவை எதிர்த்து வங்கதேச அணி, சுவிட்சர்லாந்தின் லாசேனில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். எனினும் 'உலக' தொடர் திட்டமிட்டபடி நடக்கும்.

இதனிடையே வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது.'உலக கோப்பை தொடரில் பங்கேற்பது பற்றி அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக,' பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

தேர்வானது எப்படி 'டி-20' உலக கோப்பை (2026), ஐரோப்பிய பிரிவில் நெதர்லாந்து, இத்தாலி அணிகள் 'டாப்-2' இடம் பெற்று, தகுதி பெற்றன. ஜெர்சே 3, ஸ்காட்லாந்து 4வது இடம் பெற்றன. எனினும், சர்வதேச தரவரிசையில் ('நம்பர்-14') முன்னிலையில் உள்ளது, முந்தைய உலக கோப்பை தொடர்களின் செயல்பாடு அடிப்படையில், ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டு, 'சி' பிரிவில் இடம் பெற்றது.



நிதி இழப்பு

உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேச அணி பெருமளவு நிதி இழப்பை சந்திக்க உள்ளது. * பங்கேற்பு கட்டணம் ரூ. 4.6 கோடி கிடைக்காது. 'ஸ்பான்சர்' நிதியை இழக்க நேரிடும். * ஐ.சி.சி., ஆண்டு நிதி பகிர்வு தொகை ரூ. 248 கோடி வழங்கப்பட மாட்டாது. இது பி.சி.பி., ஆண்டு பட்ஜெட்டில் 60 சதவீதம்.



இரண்டாவது முறை உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத போதும், கடைசி நேரத்தில் வேறு அணிகள் விலகியதால், ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது, இரண்டாவது முறையாக நடந்தது. முன்னதாக 2009ல் இங்கிலாந்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க, ஜிம்பாப்வே வீரர்களுக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க மறுத்தது. கடைசியில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இதற்கு முன் கொழும்பு குண்டு வெடிப்பு, உள்நாட்டு போர் காரணமாக, இலங்கையில் நடந்த உலக கோப்பை தொடரில் (1996, 50 ஓவர்) பங்கேற்க ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மறுத்தன. இந்த இரு அணிகள் தோற்றதாக அறிவிக்கப்பட்டு, இலங்கைக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜிம்பாப்வேயின் அப்போதைய அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிரான நிலை காரணமாக, இங்கிலாந்து அணி, உலக கோப்பை போட்டிக்காக (2003, 50 ஓவர்) ஜிம்பாப்வே செல்ல மறுத்தது.
பாதுகாப்பு காரணத்திற்காக நியூசிலாந்து அணி, கென்யா செல்லவில்லை. தங்கள் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற இரு அணிகளின் கோரிக்கையை ஏற்க ஐ.சி.சி., மறுத்தது. இங்கிலாந்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை (2009) தொடரில் பங்கேற்க, ஜிம்பாப்வே வீரர்களுக்கு விசா வழங்க மறுத்தது இங்கிலாந்து அரசு. கடைசியில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
வங்கதேசத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், 19 வயது உலக கோப்பை (2016) தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது. தற்போது (2026) பாதுகாப்பு காரணங்களால் இந்தியா வர மறுத்த வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து இடம் பெற்றது.

இந்தியாவுக்கு சலுகை


கடந்த 2025ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. கடைசியில், இந்தியா கோரிக்கை ஏற்கப்பட்டு, போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டன.

யார் யாருடன்...


'டி-20' உலக கோப்பை தொடரில் 20 அணிகள், 4 பிரிவுகளாக (தலா 5) பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில், பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்காவுடன் உள்ளது. 'சி' பிரிவில் இருந்த வங்கதேச அணிக்குப் பதில் ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், இத்தாலி அணிகள் உள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us