ADDED : செப் 28, 2024 12:21 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் உல்லாஸ்நகரில், ரியா பார்டே என்ற நடிகை வசித்து வந்தார். இவர், பல்வேறு ஆபாச படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரியா, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், நம் நாட்டில் சட்டவிரோதமாக அவர் வசித்து வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, ரியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் ரியாவுடன், அவரது பெற்றோர், சகோதரர், சகோதரியும் வசித்து வருவது தெரியவந்துள்ளது. எனினும், அவரது பெற்றோர் தற்போது கத்தார் நாட்டில் உள்ளனர்.
அவரது சகோதரரும், சகோதரியும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள், எத்தனை நாட்களாக இதுபோல் சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.