துறவி வேடத்தில் வங்கதேசத்தினர்: வேகம் எடுக்கும் ஆபரேஷன் கலாநெமி
துறவி வேடத்தில் வங்கதேசத்தினர்: வேகம் எடுக்கும் ஆபரேஷன் கலாநெமி
ADDED : செப் 08, 2025 08:34 AM

டேராடூன்: துறவியாக வேடமிட்ட வங்கதேசத்தினர் உள்பட 14 பேரை உத்தராகண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தராகண்டில் மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களை 'ஆபரேஷன் கலாநெமி' என்ற பெயரில் போலீசார் கைது செய்து வருகின்றனர். இவர்களின் கைது நடவடிக்கையின் போது வங்கதேசத்தில் இருந்து ஊடுருபவர்களும் சிக்கி வருகின்றனர்.
இந் நிலையில், 14 போலி சாமியார்களை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த போலி நபர்களும் அடங்குவர்.
இதுகுறித்து, சட்டம் ஒழுங்கு போலீஸ் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே கூறுகையில், ஆபரேஷன் கலாநெமி மூலம் நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளோம். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட 14 போலி சாமியார்களை தற்போது கைது செய்திருக்கிறோம்.
இதுவரை மாநிலத்தில் மொத்தம் 5,500 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1182 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.