உத்தரகண்டில்'ஆப்பரேஷன் கல்நேமி' தீவிரம்; வங்கதேசப் பெண் கைது
உத்தரகண்டில்'ஆப்பரேஷன் கல்நேமி' தீவிரம்; வங்கதேசப் பெண் கைது
ADDED : நவ 26, 2025 08:24 AM

டேராடூன்: உத்தரகண்டில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்கதேசப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளால், சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரையில் சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் வங்கதேசம் திரும்பி விட்டனர். அதேபோல, எல்லையை ஒட்டியுள்ள பிற மாநிலங்களிலும், சட்டவிரோதமாக குடிபெயந்தவர்களும் வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே, உத்தரகண்டில் போலி அடையாளங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டுபிடிக்கும் 'ஆப்பரேஷன் கல்நேமி' என்ற நடவடிக்கையையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹிந்து பெயரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பப்லி பேகம்,28, என்ற இளம்பெண்ணை டேராடூன் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தின் கய்பான்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லி பேகம். கொரோனா தொற்கு காலத்தில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இவர், கடந்த 2021ம் ஆண்டு டேராடூன் வந்துள்ளார்.அங்கு உள்ளூர் நபரை 2022ல் திருமணம் செய்துள்ளார். பூமி ஷர்மா என்ற பெயருடன் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளார், என தெரிய வந்துள்ளது.

