ADDED : ஜூன் 13, 2025 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில், சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட குல்ஷம் பேகம், 23, என்பவர், டில்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், வங்கதேசத்தின் நரெய்ல் மாவட்டத்தின் ஜம்ரில் தங்கா என்ற நகரை பூர்வீகமாக கொண்ட அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தென் மேற்கு டில்லி போலீசார், இதுரை 145 வங்கதேசத்தவரை, சட்ட விரோதமாக டில்லியில் வசித்த குற்றத்திற்காக கடந்த ஆண்டு 26ம் தேதி முதல் கைது செய்துள்ளனர். அவர்கள், குடியேற்றத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வங்கதேச நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.