பா.ஜ., முன்னாள் அமைச்சரின் பாருக்கு வங்கி அதிகாரிகள் 'சீல்'
பா.ஜ., முன்னாள் அமைச்சரின் பாருக்கு வங்கி அதிகாரிகள் 'சீல்'
ADDED : ஜன 18, 2024 05:05 AM

துமகூரு: கடனை திருப்பிச் செலுத்தாதால், பா.ஜ., முன்னாள் அமைச்சர் சொகடு சிவண்ணாவுக்கு சொந்தமான பாருக்கு, வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
துமகூரை சேர்ந்தவர் சொகடு சிவண்ணா. பா.ஜ., முன்னாள் அமைச்சர். இவருக்கு சொந்தமான பார் அன்டு ரெஸ்டாரண்ட், துமகூரு டவுன் பஸ் நிலைய சாலையில் உள்ளது. இந்த பார் அன்டு ரெஸ்டாரன்டை, கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, சொகடு சிவண்ணா 12 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் வட்டியையும், அசலையும் திரும்ப செலுத்தவில்லை. வட்டியை செலுத்தும்படி பல முறை, வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, பார் அன்டு ரெஸ்டாரன்டிற்கு 'சீல்'வைக்க, நீதிமன்றத்தின் அனுமதியை, வங்கி அதிகாரிகள் பெற்றனர். நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற, வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு 'சீல்' வைத்தனர். அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.