தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் பார்லி.,': பிரதமர் மோடி

'புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் பார்லி.,': பிரதமர் மோடி

'புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் பார்லி.,': பிரதமர் மோடி


ADDED : ஏப் 14, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் பார்லி.,'



பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: நம் நாட்டின் பார்லி., புதிய வரலாறு படைக்கப் போகிறது. மகளிருக்கான கடந்த கால மற்றும் எதிர்கால கனவுகளை நனவாக்குவது தான் அந்த புதிய வரலாறு.

சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், நம் பணி கலாசாரத்திலும், முடிவெடுக்கும் முறையிலும் இயற்கையான அங்கமாக இருக்க வேண்டும் என்ற கனவை இந்தச் சட்டம் நனவாக்குகிறது.

கடந்த 2023ல் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. 2029ல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த, கடந்த முறை போலவே, இம்முறையும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

நம் காலத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இது இருக்கும். மகளிருக்கு அதிகாரம் வழங்குவதற்காக அர்ப் பணிக்கப்பட்ட ஒரு முடிவு. இது, பெண்மையின் வலிமைக்கும் போற்றுதலுக்கும் செலுத்தப்படும் உண்மையான காணிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us