ADDED : பிப் 10, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி: ஹாவேரி ஹிரேகெரூர் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., - பி.சி.பாட்டீல். இவர், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவரது மகள் ஸ்ருஷ்டி. ஹாவேரி மாவட்ட பா.ஜ., மகளிர் அணி தலைவியாக இருந்தார்.
இந்நிலையில், மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து விலகுவதாக கூறி, ஹாவேரி மாவட்ட பா.ஜ., தலைவர் அருண்குமார் புஜாரிடம், ஸ்ருஷ்டி நேற்று கடிதம் கொடுத்தார்.
அவர் கூறுகையில், ''கட்சியின் சாதாரண தொண்டராக தொடருவேன்; ஓராண்டு தலைவியாக இருந்தது மகிழ்ச்சியான விஷயம். எதிர்பார்த்த அளவுக்கு தலைவி பதவியில் இருந்து, எதையும் சாதிக்கவில்லை என்று தோன்றியது. இதனால் ராஜினாமா செய்கிறேன். பதவி வேறு யாருக்காவது கிடைக்கட்டும். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என்றார்.

