
ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாக்.,கிற்கு சரியான பதிலடி அளித்தோம். இது, நம் எல்லைகளில் எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம் என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியது. போர் போன்ற சூழலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
அவசரம் கூடாது!
நாடு முழுதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் அவசரம் காட்டக்கூடாது. பீஹார் தேர்தல் முடியும் வரை பொறுமை காக்க வேண்டும். இது, அங்கு பலன் அளித்ததா என்பதை ஆய்வு செய்த பின், பிற மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும்.
ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
போராட்டம் நடத்தும்!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மூலம் பா.ஜ.,வின் வேண்டுகோளுக்கு இணங்க, தகுதிவாய்ந்த வாக்காளர்களை நீக்கினால், ஜனநாயக ரீதியில் திரிணமுல் காங்கிரஸ் போராடும். பா.ஜ.,வின் வலையில் யாரும் சிக்கக் கூடாது.
குணால் கோஷ் செய்தி தொடர்பாளர், திரிணமுல் காங்.,

