" இது முடிவின் ஆரம்பம் " முன்னாள் 'டீன்' கைதுக்கு கவர்னர் சொன்ன பதில்
" இது முடிவின் ஆரம்பம் " முன்னாள் 'டீன்' கைதுக்கு கவர்னர் சொன்ன பதில்
ADDED : செப் 03, 2024 07:17 AM

புதுடில்லி: 'ஊழல் வழக்கில் கோல்கட்டா மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டது தான் முடிவின் ஆரம்பம்' என மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை சம்பவம் நிகழ்ந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து மருந்து, மாத்திரைகளை விற்றது, நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தன.
கைது
உரிய விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். புகார்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், சந்தீப் கோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு வரி பதில்!
இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, இதுதான் முடிவின் ஆரம்பம் என மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் ஒரு வரியில் பதில் அளித்தார். மேலும் தகவல் கூறுமாறு நிருபர்கள் கூறியதற்கு, விவரம் தெரிவிக்காமல் ஆனந்த போஸ் சென்று விட்டார்.