பெலகாவி - பெங்களூரு, மைசூரு கே.எஸ்.டி.டி.சி., 5 நாள் சுற்றுலா
பெலகாவி - பெங்களூரு, மைசூரு கே.எஸ்.டி.டி.சி., 5 நாள் சுற்றுலா
ADDED : நவ 22, 2024 07:12 AM
பெலகாவி: பெலகாவியில் இருந்து பெங்களூரு, மைசூரு, பேலுார் சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு சுற்றுலா திட்டத்தை கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக மாநில சுற்றுலா அபிவிருத்திக் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு, மைசூரு, பேலுார் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பெலகாவி மக்களுக்காக ஐந்து நாள் சுற்றுலா திட்டத்தை கே.எஸ்.டி.டி.சி., அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஸ், பெலகாவியில் இருந்து இரவு 9:00 மணிக்கு பஸ் புறப்படும்.
இரண்டாம் நாள்: காலையில் ஹலேபீடு சென்றடைதல். அங்கு குளித்து, காலை 8:00 முதல் 9:00 மணி வரை டிபன் சாப்பிடுதல்; பின், ஹொய்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்லுதல். இங்கு 10:00 முதல் 11:00 மணி வரை தரிசனம். மதிய உணவு பேலுாரில் சாப்பிடலாம்.
அதை அடுத்து, ஸ்ரவண பெளகொலாவில், பகல் 2:00 முதல் 3:00 மணி வரை இசை கேட்பது; மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை மைசூரு கே.ஆர்.எஸ்., கார்டனை பார்த்த பின், மைசூரில் இரவு தங்குதல்.
மூன்றாம் நாள்: காலை 8:00 மணிக்கு புறப்படுதல்; காலை உணவுக்கு பின், சாமுண்டீஸ்வரி மலை, உயிரியல் பூங்கா, அரண்மனை, செயின்ட் பிலோமினா தேவாலயம், ஸ்ரீரங்கப்பட்டினம், திப்பு கோட்டை அரண்மனையை பார்க்கலாம். மாலை 6:00 மணிக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு சிவசமுத்திராவை அடைவது; இரவில் அங்கு தங்கலாம்.
நான்காவது நாள்: காலை உணவுக்கு பின், பெங்களூருக்கு புறப்படுதல். காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பன்னர்கட்டா தேசிய பூங்கா, புல் டெம்பிள், விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம், விதான் சவுதா, உயர்நீதிமன்றம் வெளியில் இருந்து பார்ப்பது; இஸ்கான் கோவிலில் தரிசனம் செய்த பின், அங்கிருந்து பெலகாவிக்கு புறப்படுதல்; வழியில் இரவு உணவு சாப்பிடலாம்.
ஐந்தாம் நாள்: பெலகாவி சென்றடைதல்
இந்த சுற்றுலா திட்டத்தில் பெங்களூரு, மைசூரு, பேலுார் ஆகிய இடங்களில் உள்ள 15 சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு, 080 --4334 4334; 89706 50070 என்ற மொபைல் எண்ணில் அறியலாம்.