அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு
அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு
ADDED : ஜூன் 13, 2024 11:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடா நகர்: அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்று கொண்டார்.
அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. என்பிபி கட்சி 6 என்சிபி 3, அருணாச்சல மக்கள் கட்சி 2, காங்., 1, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
நேற்று, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பெமா காண்டு,, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று நடந்த பதவியேற்பு விழாவில் பெமா காண்டு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பாஜ., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.