மேற்கு வங்கத்தில் சட்ட விரோத குடியேற்றத்திற்கு தடை : அமித்ஷா உறுதி!
மேற்கு வங்கத்தில் சட்ட விரோத குடியேற்றத்திற்கு தடை : அமித்ஷா உறுதி!
UPDATED : அக் 27, 2024 07:45 PM
ADDED : அக் 27, 2024 07:43 PM

கோல்கட்டா: வரும் 2026ல் மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சி அமைத்தால், சட்டவிரோதமாக, வங்கதேச அகதிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்திய- வங்தேச எல்லைப்பகுதியான பெட்ராபோல் துறைமுகத்தில் புதிய பயணிகள் முனைய திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
மாநிலத்தில் சட்டவிரோதமாக வங்கதேச அகதிகள் நுழைவதால் இந்திய அமைதி சீர் குலைகிறது. இங்கு அமைதி ஏற்பட வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
அப்படி மாற வேண்டும் என்றால், மாநிலத்தில் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்பட வேண்டும். பா.ஜ., ஆட்சி அமைத்தால் இங்கு சட்ட விரோதமாக அகதிகள் நுழைவது தடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசு, மேற்கு வங்க வளர்ச்சிக்கு பிரதமர் அளிக்கும் நிதியை ஊழல் செய்வதற்கு பயன்படுத்துகிறது. ஊழலுக்கு துணை போகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ.56,000 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளது. அந்த நிதி சரியாக பயனாளிகளுக்கு போய் சேர்ந்திருக்கிறதா? இல்லை, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கைக்கு போய்சேர்ந்துவிட்டது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து விசாரணை செய்ய வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.