பெங்களூரு - கோவை டபுள் டக்கர் வாரத்தில் 7 நாட்களும் இயக்கம்
பெங்களூரு - கோவை டபுள் டக்கர் வாரத்தில் 7 நாட்களும் இயக்கம்
ADDED : மார் 03, 2024 07:02 AM

பெங்களூரு: 'பெங்களூரு - கோயம்புத்துார் இடையே வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே இயங்கி வந்த 'டபுள் டக்கர்' ரயில் எனும் உதய் எக்ஸ்பிரஸ், இனி ஏழு நாட்களும் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண் 17392: ஹூப்பள்ளி - கே.ஆர்.எஸ்., பெங்களூரு தினசரி விரைவு ரயில், மார்ச் 4 வரையும்;
எண் 06243: பெங்களூரு - ஹொஸ்பேட் தினசரி பாசஞ்சர் சிறப்பு ரயில் மார்ச் 5 வரையும்;
எண் 06244: ஹொஸ்பேட் - பெங்களூரு தினசரி பாஞ்சர் ரயில் மார்ச் 6 வரையும்;
எண் 06245: ஹொஸ்பேட் - ஹரிஹர் தினசரி விரைவு ரயில் மார்ச் 5 வரையும்;
எண் 06246: ஹரிஹரா - ஹொஸ்பேட் தினசரி விரைவு ரயில் மார்ச் 6 வரையும்;
எண் 06545: யஷ்வந்த்பூர் - விஜயபுரா தினசரி விரைவு ரயில் மார்ச் 5 வரையும்;
எண் 06546: விஜயபுரா - யஷ்வந்த்பூர் தினசரி விரைவு ரயில் மார்ச் 6 வரையும் கூடுதலாக இரண்டாம் வகுப்பின் இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
ரயில் எண்கள் 22665 / 22666 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோயம்புத்துார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில்கள் வாரத்தில் புதன் கிழமை தவிர, ஆறு நாட்கள் டபுள் டெக்கர் ரயில் இயங்கி வந்தன.
பயணியர் வசதிக்காக இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்படும். அதேவேளையில் ரயில் நேரம், நிறுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பெங்களூரில் வசிக்கும் கோயம்புத்துாரை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைவர்.

