sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு போட்டா போட்டி! நிர்மலா சீதாராமனா, ராஜிவ் சந்திரசேகரா?

/

பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு போட்டா போட்டி! நிர்மலா சீதாராமனா, ராஜிவ் சந்திரசேகரா?

பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு போட்டா போட்டி! நிர்மலா சீதாராமனா, ராஜிவ் சந்திரசேகரா?

பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு போட்டா போட்டி! நிர்மலா சீதாராமனா, ராஜிவ் சந்திரசேகரா?

3


ADDED : பிப் 13, 2024 07:02 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:02 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜிவ் சந்திரசேகர் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,க்கு மாற்று தொகுதி ஒதுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு பின், 2019 லோக்சபா தேர்தலில், அவரது மனைவிக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், பசவனகுடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவிசுப்பிரமண்யாவின் அண்ணன் மகன் தேஜஸ்வி சூர்யாவை, கட்சி மேலிடம் நிறுத்தியது. தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ஹரி பிரசாத், 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தேஜஸ்வி சூர்யா, தொகுதியிலும், லோக்சபாவிலும் நாட்டின் முன்னேற்றம் குறித்து அனைவரும் பாராட்டும் வகையில் பேசுவார். மீண்டும் இவருக்கே சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொகுதிக்கு மத்திய அமைச்சர்கள் இருவர் குறி வைத்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன்


கடந்த 2016 முதல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இவரின் பதவி காலம் 2028 ஜூன் 30ல் முடிவடைகிறது.

தேசிய அளவில் இவரின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் இவரும் ஒருவர்.

முன்னதாக, நிர்மலா சீதாராமனை, பா.ஜ.,வின் கோட்டையான தட்சிண கன்னடாவில், நளின் குமார் கட்டீலுக்கு பதிலாக போட்டியிட வைக்க மேலிடம் நினைத்தது. ஆனால், நிர்மலா சீதாராமன், பெங்களூரு தெற்கில் களமிறங்கவே விரும்புகிறார்.

ராஜிவ் சந்திரசேகர்


இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.,வின் ராஜிவ் சந்திரசேகர், காங்கிரசின் ஹனுமந்தையா, ஜி.வி.சந்திரசேகர், சையது நசீர் உசேன் ஆகியோரின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

தற்போது, மத்திய இணை அமைச்சராக இருப்பதால், மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என ராஜிவ் சந்திரசேகர் எதிர்பார்த்தார். ஆனால், கட்சி மேலிடம் நேற்று முன்தினம் வட கர்நாடகாவின் பாகல்கோட்டை சேர்ந்த நாராயணா கிருஷ்ணஜா பந்தகேவை வேட்பாளராக அறிவித்து விட்டது.

அதே நேரம், இவரை லோக்சபா தேர்தலில் களமிறக்க திட்டமிட்டு உள்ளது. படித்தவர்கள் அதிகம் உள்ள பெங்களூரு தெற்கு தொகுதியில் நிர்மலா சீதாராமனையும், பெங்களூரு மத்திய தொகுதியில் ராஜிவ் சந்திரசேகரையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு தற்போதைய பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி., மோகன் வருத்தம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ராஜிவ் சந்திரசேகரும், பெங்களூரு மத்திய தொகுதிக்கு பதிலாக, பெங்களூரு தெற்கு தொகுதி பாதுகாப்பானதாக இருக்கும் என நினைக்கிறார். இதற்காக கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

இப்படி, பெங்களூரு தெற்கு தொகுதிக்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் போட்டி போடுவது, மேலிடத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இருவரில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது, வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின் போது தான் தெரியவரும்.

இருவரில் ஒருவருக்கு சீட் ஒதுக்கும் பட்சத்தில், தற்போதைய பெங்களூரு தெற்கு எம்.பி.,யாக உள்ள தேஜஸ்வி சூர்யாவுக்கு வேறு தொகுதியை ஒதுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us