குடிநீர் இணைப்பு பெற 'மிஸ்டு கால்' பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்
குடிநீர் இணைப்பு பெற 'மிஸ்டு கால்' பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்
ADDED : டிச 06, 2024 06:46 AM
பெங்களூரு: புதிதாக குடிநீர் இணைப்பு பெறும் நடைமுறையை எளிமையாக்கும் நோக்கில், கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வது போன்று, 'மிஸ்டு கால்' நடைமுறையை செயல்படுத்த, பெங்களூரு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
காவிரி குடிநீர் இணைப்பு பெறும் வசதியை எளிமையாக்க, குடிநீர் வாரியம் திட்டம் வகுத்துள்ளது. கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய மிஸ்டு கால் வசதி உள்ளது. அது போன்று காவிரி குடிநீர் இணைப்பு பெற, மிஸ்டு கால் நடைமுறையை செயல்படுத்த, குடிநீர் வாரியம் தயாராகி வருகிறது.
காவிரி குடிநீர் இணைப்பு தேவை என்றால், ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். குடிநீர் வாரிய அதிகாரிகள், அந்தந்த வீட்டுக்கு வந்து குடிநீர் இணைப்பு ஏற்படுத்துவர். இந்த தொழில்நுட்பம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும்.
புதிய நடைமுறை அமலுக்கு வந்த பின், குடிநீர் வாரியம் அளிக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன்பின் குடிநீர் வாரிய சஹாயவாணி அலுவலக ஊழியர்கள், மிஸ்டு கால் வந்த எண்ணில் தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களை பெற்று கொள்வர். இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிப்பர்.
அதன்பின் அதிகாரிகள், புதிய இணைப்பு பெற விண்ணப்ப படிவம் உட்பட அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு சென்று, குடிநீர் இணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பர். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தினால் காவிரி குடிநீர் இணைப்பு கிடைக்கும்.
சமீபத்தில், பெங்களூரு மாநகராட்சியின் 110 கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் வினியோகம் துவங்கப்பட்டது. கிராமத்தினர் குடிநீர் இணைப்பு பெறுவதில், சிலகுளறுபடிகள்இருந்தன. இதனால் அவர்களால் குடிநீர் இணைப்பு பெறமுடியவில்லை. இவர்களுக்கு மிஸ்டு கால் வசதி உதவியாகஇருக்கும்.
கடந்து 15 நாட்களில் காவிரி குடிநீர் இணைப்பு பெற, 5,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள்வந்தன.
இவற்றில் 1,163 பேர் கட்டணம் செலுத்தி, புதிய இணைப்பை பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.