ADDED : ஜன 17, 2025 11:35 PM

கர்நாடகாவிற்கு மத்திய அரசு செய்யும் துரோகம் முழு வீச்சில் தொடர்கிறது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1.73 லட்சம் கோடி ரூபாயில், கர்நாடகாவிற்கு வெறும் 6,310 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; இது, முந்தைய தவணைகளை விட மிக குறைவு. இது, கன்னடர்களை கேலி செய்வது போல் உள்ளது.
சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்கிரஸ்
சனாதன தர்மம் வளர்கிறது!
கும்ப மேளாவுக்கு வரும் கூட்டம் குறைவு என அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். ஊடகங்கள் உள்ளன. அவை நேரலை செய்கின்றன. அதை பார்த்தே எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ளலாம். சனாதன தர்ம தத்துவம் தற்போது வளர்ந்து வருகிறது. அது, அகிலேஷ் போன்றோருக்கு எரிச்சலை தருகிறது.
ரவி கிஷண், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
அரசுக்காக செயல்படுகின்றன!
கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து அரசு நிறுவனங்களையும் பா.ஜ., கைப்பற்றியுள்ளது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, டில்லி போலீஸ், தேர்தல் கமிஷன் போன்ற அனைத்து அமைப்புகளும் மத்திய அரசின் கட்டளைப்படி செயல்படுகின்றன.
அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள், முதல்வர், காங்கிரஸ்