sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முன்னணி குடியரசு நாடாக உருவாக்க பாகவத் அழைப்பு

/

முன்னணி குடியரசு நாடாக உருவாக்க பாகவத் அழைப்பு

முன்னணி குடியரசு நாடாக உருவாக்க பாகவத் அழைப்பு

முன்னணி குடியரசு நாடாக உருவாக்க பாகவத் அழைப்பு

2


ADDED : ஜன 27, 2026 02:43 AM

Google News

ADDED : ஜன 27, 2026 02:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்பூர்: ''உலகின் முன்னணி குடியரசாக நம் நாடு உருவாக, குடிமக்கள் அனைவரும் அரசியல் சாசன கடமைகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, பீஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: அரசியல் சாசனம் நமக்கு தர்மத்தை போதிக்கிறது. அதை தவறாமல் படிக்கும் பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமைகள் நினைவிலேயே இருக்கும். நம் சட்டங்களை மதித்து நடப்பது முதன்மை கடமை. நம் முன்னோர் செய்த மகத்தான தியாகத்தால், நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. நம் நாட்டை முன்னணி குடியரசு நாடாக உருவாக்க, மக்கள் அனைவரும் அரசியல் சாசன கடமைகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும்.

தேசியக் கொடியில் உள்ள காவி நிறம் தியாகம், ஆற்றல் மற்றும் நம் நாட்டின் புராதன கலாசாரத்தை குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் துாய்மையான எண்ணத்தையும், கடைசியில் உள்ள பச்சை நிறம், முன்னேற்றம், செழுமை மற்றும் தொடர் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம், அனைத்து முன்னேற்றங்களும் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டத்தக்கது


வந்தே மாதரம் பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியும், அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கும் தேசபக்தியை ஊட்டி உத்வேக த்தை அளிக்கும். தேச உணர்வு, தேசப்பற்றை துாண்டும் இப்பாடலை குடியரசு தின அணி வகுப்பில் மத்திய அரசு இடம்பெற வைத்தது பாராட்டத்தக்கது.
- தத்தாத்ரேய ஹொஸபலே, பொதுச்செயலர், ஆர்.எஸ்.எஸ்.,








      Dinamalar
      Follow us