ADDED : டிச 15, 2024 11:22 PM

தங்கவயல்:தங்கவயல் தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் விழா நேற்று நடந்தது.
தேசியக்கவி பாரதியார் விழாவை முன்னிட்டு அவரின் தேசபக்தி, தமிழுணர்வு, சமுதாய சிந்தனைகள் குறித்து கமல் முனிசாமி, முனிசாமி, நடராஜன், அப்பு ஜெயகுமார் ஆகியோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. வழக்கம் போல பொங்கல் தினத்தன்று தமிழர் பண்பாட்டு ஊர்வலம், தமிழ்த்தாய் தேர் பவனி நடத்துவது; தாரை தப்பட்டை முழங்க சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவது; ஜாதி மத பேதமின்றி தமிழுணர்வோடு தமிழறிஞர்கள், தமிழார்வலர்களை ஒருங்கிணைய அழைப்பது;
திருக்குறள், பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல்; மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த தமிழ் கலாச்சார நடன நிகழ்ச்சிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீபம் சுப்ரமணியம், திருமுருகன், கருணாகரன், அனிஷ், ஆர்.வி.குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

