தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
ADDED : மே 13, 2025 09:34 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. புவனேஸ்வரில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது. நாள்தோறும் வெப்பநிலையில் காணப்படும் மாற்றத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக வடமாநிலங்களில் வெயில் கடுமையாக தாக்கி வருகிறது. ஒடிசாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பம் காணப்படுகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது.
சம்பல்பூர் நகரம் மாநிலத்தில் அதிக வெப்பமான பகுதியாக காணப்படுகிறது. இங்கு மட்டும் 42.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது. ஹிராகுட் 42.4, ஜார்ஸ்குடா 42.2, போலாங்கிர் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.