லாலு மகன் ஹோலி கொண்டாட்டம்; சீருடையுடன் நடனமாடிய போலீஸ் டிரான்ஸ்பர்
லாலு மகன் ஹோலி கொண்டாட்டம்; சீருடையுடன் நடனமாடிய போலீஸ் டிரான்ஸ்பர்
ADDED : மார் 16, 2025 05:04 PM

பாட்னா: பீகாரில் மாஜி முதல்வர் மகனின் ஹோலி விழாவில் சீருடையில் நடனம் ஆடிய காவலர், பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
பீகார் மாஜி அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் அம்மாநில மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனாவார். தேஜ் பிரதாய் யாதவ், தமது வீட்டில் ஹோலி கொண்டாடினார். அப்போது அவருக்கான பாதுகாப்பு பணியில் காவலர் தீபக் குமார் என்பவர் இருந்துள்ளார்.
அவரை ஹோலி கொண்டாட்டத்தின் போது நடனம் ஆடுமாறு தேஜ் பிரதாப் யாதவ் வற்புறுத்தி இருக்கிறார். காவலர் மறுக்கவே சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஒருகட்டத்தில் காவலர் நடனமாட, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சீருடையில் நடனமாடியதாக புகார்கள் எழவே, காவலர் தீபக் குமார், மாஜி அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாதது, வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லாதது ஆகிய காரணங்களுக்காக தேஜ் பிரதாப்புக்கு நான்காயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.