பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து ஒரு கட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்
பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து ஒரு கட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்
UPDATED : ஆக 09, 2025 10:48 AM
ADDED : ஆக 09, 2025 10:46 AM

புதுடில்லி; பீஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் கடந்தும், எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அது குறித்து இதுவரை (ஆகஸ்ட் 8 காலை 9 மணி வரை) எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை.
நேரடியாக 6,257 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டு உள்ளது.18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 36,060 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.